டெல்லி: மருத்துவ கல்லூரி முறைகேடு தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரிகள், போலிசாமியார் உட்பட 34 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சத்தீஸ்கர் ராய்ப்பூரில் போலி சாமியார் ரவிசங்கர் மஹராஜ் மருத்துவ கல்லூரிக்கு சான்றுதர கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ கல்வி ஆணையத்திலிருந்து ஆய்வுக்கு வருபவர்களை முன்கூட்டியே அறிந்து ரவிசங்கர் லஞ்சம் தந்ததாக புகார் எழுந்தது. ஆய்வுக்கு வரும் என்எம்சி அதிகாரிகளை கண்டறிய ரவிசங்கர் மஹராஜூக்கு முன்னாள் யூசிஜி தலைவர் டி.பி. சிங் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. டி.பி.சிங் தற்போது மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சைன்ஸ் பல்கலை.யின் வேந்தராக உள்ளார். ஆய்வுக்கு வரும் அதிகாரிகளின் விவரங்களை பெற போலி சாமியார் ரவிசங்கர் மஹராஜ் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளார். ஆய்வின்போது ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து மருத்துவர்களை அழைத்துச் சென்று பேராசிரியர்களாக நடிக்க வைத்ததும் அம்பலமானது.
The post மருத்துவ கல்லூரி முறைகேடு தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரிகள், போலிசாமியார் உட்பட 34 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.