மருதடி அரசு பள்ளியில் ₹28 லட்சத்தில் புதிய 2 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

2 weeks ago 2

பாடாலூர், ஜன. 26: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்கள் நலனுக்காக திருச்சி டோல்வே ஐசாடெக் நிறுவனத்தின் சார்பில் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ 28 லட்சம் மதிப்பில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யாசாமி தலைமை வகித்தார். பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடங்களை நிறுவனத்தின் சிஇஓ ரமோன் சேஷா படியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள் விஜயா, சின்னசாமி, திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிர்வாக மேலாளர் துர்கா பிரசாத் ரெட்டி, நிர்வாக அலுவலர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி சந்திரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) வஹிதாபானு பள்ளி ஆசிரியர்கள் இலக்குவன், ஜீவிதா, சரளா, அமுதா, மாணவ மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் அல்லி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

The post மருதடி அரசு பள்ளியில் ₹28 லட்சத்தில் புதிய 2 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article