துவரங்குறிச்சி, பிப்.20: திருச்சி மாவட்டம் கோவில்பட்டியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.முதலமைச்சரின் இல்லம் தேடி கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காக்கும் நம்மை காக்கும் 48, புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைப் திட்டம், கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் கடைக்கோடியில் வாழக்கூடிய நபர்களுக்கும் சென்றடையும் வண்ணம் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவு கிணங்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
The post மருங்காபுரி அடுத்த கோவில்பட்டி appeared first on Dinakaran.