மராட்டியம்: ரூ.1,200-ஐ திருடியதாக சந்தேகம் - வாலிபர் அடித்துக்கொலை

8 hours ago 2

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த ராஜு என்கிற பைதுல்லா கான் (26) மற்றும் அஜய் (25) ஆகியோர் அப்பகுதியில் உள்ள கல்யாண மண்டப அலங்கார வேலை செய்து வந்தனர். அப்போது அவர்களின் பணம் ரூ. 1200 காணாமல் போனது.

இதனால் அவர்களுடன் வேலை செய்த சக ஊழியரான அனில் பிரிஜ்லால் (36) என்பவர் மீது பணத்தை திருடியதாக சந்தேகித்தனர். இந்த நிலையில் அவரிடம் பணத்தை கேட்டு அவரை இரும்பு கம்பிகள் மற்றும் மூங்கில்களால் சரமாரியாக அடித்தனர்.

இதில் பலத்த காயமடைந்த அனில் பிரிஜ்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் ராஜு மற்றும் பைதுல்லா கான் இருவரையும் கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article