
மும்பை,
மராட்டிய மாநிலம் ராவின் மாவட்டத்தில் உள்ள துர்ஷெட் கிராமத்தில் வசிப்பவர்கள் சாலையோரத்தில் கிடந்த ஒரு சூட்கேசிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கவனித்தனர். பின்னர் சூட்கேஸ் ஒன்று சந்தேகத்திற்கிடமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சூட்கேசை திறந்தனர்.
அதில் இருந்த உடலை கண்ட அங்கிருந்த அதிகாரில் அதிர்ச்சியடைந்தனர். அந்த சூட்கேசில் அழுகிய நிலையில், ஒரு பெண்ணின் உடல் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் இந்த உடலை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த பெண் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் இன்னும் உடல் அடையாளம் காணப்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சூட்கேசுக்குள் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.