
மும்பை,
மராட்டிய மாநிலம் கன்னாட்டில் இருந்து பிஷோர் நோக்கி லாரி ஒன்று கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த லாரியில் 17 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பிஷோர் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த சில தொழிலாளர்கள் சாலையில் விழுந்தனர். மேலும் சிலர் கரும்பு குவியலுக்கு அடியில் சிக்கி கொண்டனர். அனைத்து தொழிலாளர்களும் காயத்துடன் உயிருக்கு
இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் துரிதமாக மீட்பு பணியை மேற்கொண்டனர். இதில் கரும்பு குவியலுக்கு அடியில் இருந்து 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் காயமடைந்த மற்ற தொழிலாளர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான தொழிலாளர்கள் அனைவரும் 23 வயது முதல் 36 வயதுடையவர்கள் என்று தெரியவந்தது. மற்ற 11 தொழிலாளர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.