தண்டவாளத்தில் தூங்கிய நபர் மீது மோதிய ரெயில்

3 hours ago 1

லிமா,

தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் இருந்து பெருவியன் ஆண்டிஸ் நகருக்கு ஒரு சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ஏட் நகர் அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இதனை கண்டதும் ரெயிலின் வேகத்தை டிரைவர் குறைத்தார். எனினும் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் மீது ரெயில் மோதியது. இதில் சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபர் ஜுவான் கார்லோஸ் டெல்லோ என்பதும், போதை தலைக்கேறி தண்டவாளத்தில் படுத்து கிடந்ததும் தெரிய வந்துள்ளது.

Read Entire Article