சென்னை ,
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.ஓரேகட்டமாக நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த சூழலில் மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145 ஆகும்.
இந்நிலையில், மராட்டியத்தில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
பிரதமர் மோடி மற்றும் மகாயுதி கூட்டணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமை மற்றும் நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பு. மராட்டிய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதான தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக அயராது உழைத்த மகாயுதி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .