மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 11ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுபாஷ் நகர் பகுதியில் ஒரு காரில் இருந்து 42.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்திலிருந்து இரண்டு பேர் தப்பிச் சென்ற நிலையில், போலீசார் ஒருவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.14.35 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தப்பியோடியவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், புனே மாவட்டத்தை சேர்ந்த இருவர் மற்றும் தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மேலும் 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.