மராட்டிய தேர்தல்: முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

2 hours ago 2

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 20-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், 118 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.

மாநிலத்தில் தற்போது முதல் மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டே 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கோப்ரி -பச்பகடி தொகுதியில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டே, ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 060 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தவ் சிவசேனா கட்சி வேட்பாளர் கேதார் திகே 38,343 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தார். 

Read Entire Article