
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், மயிலம் கிராமத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்து மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலம் கிராமத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.