மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'

7 hours ago 2

மயிலாடுதுறை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்றார். மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் பாலம் அருகே சோதியக்குடி புறவழிச்சாலையில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு திருவெண்காடு சென்று அங்கு மதியம் தங்கினார். தொடர்ந்து மாலை 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு செம்பதனிருப்பு சென்று அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்துமயிலாடுதுறையில் பூம்புகார் சாலை முதல் கச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார். முதல்-அமைச்சரை பார்ப்பதற்காக சாலையின் இருபுறமும் திமுக கொடிகள், திமுக கொடி நிறத்திலான பலூன்கள், முதல்-அமைச்சர் படங்கள் கொண்ட பதாகைகளை பிடித்தபடி பொதுமக்கள் மற்றும் கட்சியினர் நின்று இருந்தனர். வழிநெடுகிலும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ மூலம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article