சிறிய படங்கள் நசுக்கப்படுகின்றன - இயக்குனர் வி.சேகர்

10 hours ago 1

நாகரத்தினம் தயாரித்து எஸ்.மோகன் இயக்கத்தில் 'வள்ளிமலை வேலன்' என்ற படம் உருவாகி இருக்கிறது. நாகரத்தினம் - இலக்கியா நடித்துள்ள இந்த படம் விரைவில் ரிலீசுக்கு வருகிறது.

பட விழாவில் இயக்குனர் வி.சேகர் பங்கேற்று பேசும்போது, "ஒரு காலத்தில் பல வெற்றிப்படங்கள் கொடுத்து கவனிக்க வைத்த இயக்குனர்கள் கூட இப்போது படம் எடுத்தால் ஓடுவதில்லை. காரணம், சினிமாவில் சூழல் மாறிவிட்டது. 4 ஆயிரம் தியேட்டர்கள் இருந்தாலும், 250 தியேட்டர்களுக்கு மேல் ஓரு பெரிய படம் ரிலீஸ் ஆகாது. மீடியம் ரக படங்களுக்கு 100 தியேட்டர்கள் வீதமும், சிறிய படங்களுக்கு 50 தியேட்டர்கள் வீதமும் ஒதுக்கப்படும்போது, எல்லா படங்களும் ஓடும் நிலை இருந்தது.

இப்போது ஒரு பெரிய படம் ரிலீசானால் 2 ஆயிரம் தியேட்டர்கள் ஒதுக்குகிறார்கள். இதனால் மற்ற படங்களின் நிலை என்னாகும்? சிறிய படங்களும் ஓடவேண்டும் என்றால் ரிலீஸ் தேதியில் மாற்றம் வேண்டும். ஒரு மாதம் பெரிய படம் ரிலீஸ் என்றால், அடுத்த மாதம் சிறிய படங்கள் இறங்கவேண்டும். பெரிய படங்கள் ரிலீசாகாத போது சிறிய படங்கள் இன்னும் அதிகம் தியேட்டர்களில் திரையிடப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலை வந்தால், சினிமா இன்னும் மேம்படும். சிறிய படங்கள் நசுக்கப்படாமல் கரையேறும்" என்றார்.

Read Entire Article