மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

1 month ago 7

 

மயிலாடுதுறை, அக்.11: மயிலாடுதுறையில் அண்ணல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எம்ஏ ராஜகுமார் தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது. அப்போது தேச தலைவர்களின் உருவ சிலைகளுக்கு பொதுமக்களும் வணிகர்களும் மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதிவரை மாவட்டம் முழுவதும் பாத யாத்திரை நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேச நலனுக்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து தியாகத் தலைவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தும் வகையில் நேற்றுமுன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்துடன் பாதயாத்திரை நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் மயிலாடுதுறை நகரப் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் மாளிகையில் இருந்து புறப்பட்டு ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து காந்திஜி சாலை, மணிக்கூண்டு, பட்டமங்கல தெரு, மகாதான வீதி வழியாக சென்று நகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசத் தலைவர்கள் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி பாத யாத்திரை நிறைவு பெற்றது. இதில், காங்கிரஸ் மற்றும் திமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், மகளிர் அணி சார்ந்தவர்கள் கதர் குல்லாய் அணிந்து காங்கிரஸ் கொடியை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை appeared first on Dinakaran.

Read Entire Article