*வியாபாரிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்
அஞ்சுகிராமம் : அழகப்பபுரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் குமரிமாவட்ட பேரவையின் கிளைச் சங்கமான அழகப்பபுரம் தொழில் முனைவோர் மற்றும் சிறுதொழில் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்கத்தலைவர் டாக்டர் ஹில்மன் புரூஸ் எட்வின் தலைமை தாங்கினார்.
செயலாளர் ஜாண்ஜெயசேகர் என்ற பாபு, துணைச் செயலாளர் கணேசலிங்கம், பொருளாளர் சகாயடென்னீஸ், மாவட்ட பிரதிநிதி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட பொருளாளர் அம்பலவாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சங்கத்தலைவர் டாக்டர் ஹில்மன் புரூஸ் எட்வின் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்தல், நலிவடைந்த வியாபாரிகளை பொருளாதார ரீதியாக உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்தல், பொதுமக்கள் பிரச்சனைக்காக ஒன்று பட்டு செயல்படுவது, சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்,
ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களையும் உபயோகப்படுத்தக் கூடாது, பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி மயிலாடி கூண்டு பால தரைப்பகுதி பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் ஆலோசனை செய்து தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பிருந்தா மலர், வள்ளிநாயகம், ஐய்யப்பன், உறுப்பினர்கள் கனகராஜ், ராஜன், அந்தோனி சந்திரசேகர், சண்முகையா, தேவசகாயம், ராஜசேகர், சுடலை, ஜாண்சன், மோரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மயிலாடி கூண்டு பால தரைப்பகுதி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.