மம்முட்டியின் 'களம்காவல்' படத்தின் செகண்ட் லுக் அப்டேட்

4 weeks ago 10

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'பசூக்கா' என்ற படம் வெளியானது. டீனா டென்னிஸ் இயக்கிய இப்படத்தினை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'மம்மூட்டி கம்பெனி' தயாரித்தது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து மம்முட்டி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் மம்முட்டி இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 'களம்காவல்' படத்தின் செக்ண்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை காலை 11.11 மணியளவில் வெளியாக உள்ளது. 

#Kalamkaval Second Look Poster Releasing Tomorrow at 11.11 AM IST pic.twitter.com/TbAxDpIknY

— Mammootty (@mammukka) April 19, 2025
Read Entire Article