
சென்னை,
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. இவரது நடிப்பில் 'டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' என்ற படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. அதனை தொடர்ந்து தற்போது புதுமுக இயக்குனரான டீனோ டென்னிஸ் இயக்கியுள்ள பசூக்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் காயத்ரி ஐயர் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மிதுன் முகந்தன் இசையமைத்துள்ளார். மேலும், நிமிஷ் ரவி மற்றும் ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்று இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான லோடிங் பசூக்கா பாடல் வெளியாகியுள்ளது.