மன்மோகன் சிங் மறைவால் ‘இந்திய நாட்டிய விழா’ ஜன.1 வரை ரத்து

3 weeks ago 5

மாமல்லபுரம்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதால் ‘இந்திய நாட்டிய விழா’ ஜன.1ம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாத்தில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில், இந்திய நாட்டிய விழா கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரையில் என நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. இதில், உள்ளூர் மற்றும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த நடன கலைஞர்கள் தங்களின் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.

Read Entire Article