போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர அனுமதிகோரி மனைவி மனு: மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

2 hours ago 1


சென்னை: போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாம் சரவணனின் மனைவி மகாலக்‌ஷ்மி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 14ம் தேதி தனது கணவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். தனது கணவருக்கு இடது காலில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த குண்டு அகற்றப்பட்டது.

குண்டு அகற்றப்பட்ட பின்னரும் ரத்தக்கசிவு உள்ளது. அதனை சரி செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கோரி கடந்த 18ம் தேதி சிறை நிர்வாகித்திடம் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிகோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், பாம் சரவணனுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறினார். இதனையடுத்து, மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர அனுமதிகோரி மனைவி மனு: மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article