மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

6 months ago 20

சென்னை,

சென்னை முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப்பொருட்களை விற்றதாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீசாரால் கைது செய்யப்பட்டனா். போலீசாரின் விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை கடத்தி வந்து கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

போதைப்பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கிற்கும் தொடா்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் அலிகான் துக்ளக் ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'போதைப்பொருட்கள் எதுவும் தன்னிடம் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த மனு சென்னை போதைப்பொருள் கடத்தல் சிறப்பு கோர்ட்டில் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

இந்தநிலையில், மனுவை விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கோர்ட்டு மனு மீதான விசாரணையை வருகிற 26-ந் தேதி தள்ளி வைத்து உத்தவிட்டுள்ளது.

#JUSTIN | மன்சூர் மகன் ஜாமின் மனு தள்ளிவைப்புபோதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் ஜாமின் கோரிய மனுமனு மீதான விசாரணையை டிசம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்து, சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு#MansoorAliKhanSon | #Bail | #ThanthiTV pic.twitter.com/M3mzWOKBak

— Thanthi TV (@ThanthiTV) December 24, 2024
Read Entire Article