நெல்லை, ஜன. 11: பழவூர் அருகே கண்ணன்குளம், நடுத்தெருவைச்சேர்ந்தவர் சுரேஷ் (40). தொழிலாளி. இவருக்கு ராசாத்தி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராசாத்தி 2 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து சென்றார். இதனால் சுரேஷ் கண்ணன்குளத்தில் வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுரேஷின் தாயார் அவருக்கு டீ கொடுப்பதற்காக அவரது அறைக்குச்சென்றார். அப்போது சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
The post மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.