மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தற்கொலை

1 month ago 5

மானூர், டிச.13: மானூர் அருகே சேதுராயன்புதூரை சேர்ந்தவர் முத்து (36). இவர் திருப்பூரில் வேலை செய்தபோது அங்கு, வீரலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தற்போது மானூர் அருகே சேதுராயன்புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.கூலித்தொழிலாளியான முத்துவிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததால், வீரலட்சுமி குழந்தைகளுடன் தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த முத்து நேற்று முன்தினம் வீட்டின் முன்புள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article