மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை; ஈரோட்டில் பயங்கரம்

4 hours ago 1

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் என்கிற சாணக்யா. இவர் மீது 2 கொலை உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், ரவுடி ஜான் இன்று காலை தனது மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது, சேலத்தில் இருந்து ஜானை 5 பேர் கொண்ட கும்பல் காரில் பின்தொடர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கும்பல் ஜானின் கார் மீது தங்கள் காரை மோதி விபத்தை ஏற்படுத்தியது.

காரை ஜானின் மனைவி ஓட்டிய நிலையில் விபத்தில் நிலைகுலைந்த அவர் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய 5 பேர் கும்பல், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பிரபல ரவுடி ஜானை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் கொடூரமாக வெட்டினர். இந்த கொடூர தாக்குதலில் ரவுடி ஜான் ரத்த வெள்ளத்தில் காரிலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவம் ஜானின் மனைவி சரண்யா முன் நிகழ்ந்துள்ளது. இந்த கொலையை தடுக்க சரண்யா முயற்சித்தபோதும் அவர் கண்முன்னே ஜானை அந்த கும்பல் சரமாரியாக வெட்டிச்சாய்த்தது.

இது குறித்து தகவலறிந்த போலீசார், ரவுடியை கொலை செய்துவிட்டு காரில் தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வந்தது. போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர், போலீஸ் என்கவுன்டர் மூலம் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள எஞ்சிய ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read Entire Article