மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழந்த சோகம்

3 months ago 14

தம்மம்பட்டி, பிப்.7: தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி வடக்கு வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(77). விவசாயியான இவரது மனைவி அய்யம்மாள்(70). இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிக்குள்ளாகி வந்தார். நேற்று முன்தினம்(5ம் தேதி) மாலை திடீரென அய்யம்மாள் உயிரிழந்தார். இதனால், மனவேதனையில் துடித்த முத்துசாமி துக்கம் தாளாமல் கண்ணீர் வடித்தபடி இருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில், அன்றிரவு 11 மணிக்கு முத்துசாமியும் உயிரிழந்தார்.

The post மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழந்த சோகம் appeared first on Dinakaran.

Read Entire Article