
மும்பை,
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு அவரது கணவர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில்,
என் சிறந்த தோழி, என் வாழ்க்கைத் துணை, என் பாதுகாப்பான இடம், என் சிறந்த பாதி, என் அனைத்திற்கும், வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒளி நீ.. உன்னை தினமும் அதிகமாக நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே. என தெரிவித்துள்ளார் .