மனிதாபிமான அடிப்படையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் மருந்துகள் அனுப்பி வைப்பு : ஒன்றிய அரசு

2 weeks ago 4

டெல்லி : இந்தியாவிலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள் உள்பட 30 டன் அளவிலான மருத்துவ உதவிகள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.அதனையடுத்து, காஸா மீதுஇஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக மாறியுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையி்ல், மனிதாபிமான அடிப்படையில் 30 டன் நிவாரணப் பொருட்களை கடந்த வாரம் பாலஸ்தீனத்துக்கு இந்தியா அனுப்பி வைத்தது. இதில்,மருந்துகள், அறுவை சிகிச்சைபொருட்கள், பல் மருத்துவத்துக்கான மருந்துகள், பொது மருத்துவ பொருட்கள் மற்றும் அதிக எனர்ஜி கொண்ட பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவை அடங்கும். பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் வேலை முகமை (யுஎன்ஆர்டபிள்யூஏ) மூலம் இந்தியாவின் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட் டது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள் உள்பட 30 டன் அளவிலான மருத்துவ உதவிகள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மனிதாபிமான ரீதியிலான உதவியாக பாலஸ்தீன மக்களுக்காக 30 டன் அளவிலான அத்தியாவசிய மருந்துகள், புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் உள்ளடங்கிய மருத்துவப் பொருட்கள் பாலஸ்தீனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” எனப் பதிவிட்டுள்ளார்.

The post மனிதாபிமான அடிப்படையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் மருந்துகள் அனுப்பி வைப்பு : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Read Entire Article