![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/19/34820996-national-04.webp)
அமராவதி,
ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் 20-வது தேசிய பேரிடர் மீட்புப் படை தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இயற்கை பேரிடரில் இருந்து மக்களை காக்க தேசிய பேரிடர் மீட்புப் படை வருகிறது. அதே சமயம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடரில் இருந்து மக்களை காக்க தேசிய ஜனநாயக கூட்டணி வரும். கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை ஆந்திர பிரதேச மாநிலம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டது.
அந்த 5 ஆண்டுகள் பற்றி ஆந்திர மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் மோடியும், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் இணைந்து 3 மடங்கு வேகத்தில் வளர்ச்சியை அதிகரிப்பார்கள்."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.