மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறல்: வாலிபர் கைது

3 months ago 16

பெரம்பூர்: புளியந்தோப்பு நாச்சாரம்மாள் தெருவை சேர்ந்தவர் ஜமீலா பேகம் (46). அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் இவரது தாய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட இவரது அக்கா ஆகியோர் உடன் வசித்து வருகின்றனர். கணவர் மற்றும் குழந்தைகள் யாரும் கிடையாது. கடந்த சில நாட்களாக ஜமீலா பேகம் இரவு பணிக்கு சென்றபோது, இவரது வீட்டிற்கு வந்த மர்மநபர், மன வளர்ச்சி குன்றிய இவரது அக்காவை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுபற்றி அறிந்த ஜமீலா பேகம் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது, புளியந்தோப்பு திருவிக நகர் மசூதி தெருவை சேர்ந்த காலித் (21) என்பவர், பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் காலித் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

The post மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article