மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும்: செஞ்சிலுவை சங்கத்தினருக்கு ஆளுநர் ரவி அறிவுறுத்தல்

1 week ago 3

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை அமைந்துள்ள வளாகத்தில் மார்பளவு காந்தி சிலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
வழக்கமான பணிகளை விட மன அழுத்தம், மனநலம் குறித்தான பணிகளில் தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. மழை, புயல். வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் பொறுப்புகளை உணர்ந்து செஞ்சிலுவை சங்கத்தினர் செயல்படுகின்றனர்.

ஆனால் தற்போது நமது மாநிலத்தில் சமூக, பொருளாதாரம் போன்ற பல காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்களால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்திய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 12 நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே செஞ்சிலுவை சங்கம் இதுபோன்று மன அழுத்தத்தில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் வகையில் தமது சேவைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களையும் செஞ்சிலுவை சங்கத்தில் இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும்: செஞ்சிலுவை சங்கத்தினருக்கு ஆளுநர் ரவி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article