
புதுடெல்லி ,
மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக நாளை இலங்கை செல்கிறார்.இலங்கையில் புதிய அதிபர் அநுர குமர திசநாயக்கே பதவியேற்றுள்ள நிலையில் இருநாடுகள் இடையிலான கூட்டாண்மையை உறுதி செய்யவும், .இருநாட்டு வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்தும் விதமாக ஜெய்சங்கர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக ஜெய்சங்கர் ஆலோசனை நடந்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.