
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மதியம் 12:48 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் போபால் மைய அதிகாரி தெரிவித்தார். நல்வாய்ப்பாக நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என நர்மதாபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.