
போபால்,
மத்திய பிரதேசம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 50). இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் தனக்கு சொந்தமான பண்ணைக்கு சென்றார். அப்போது அங்குள்ள புதரிகளுக்குள் பதுங்கி இருந்த புலி பிரகாஷ் மீது பாய்ந்து தாக்கியது.
இதனால் வலித்தாங்க முடியாமல் பிரகாஷ் கத்தினார். இதனையடுத்து சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் புலியை விரட்ட கற்களை வீசினர். பின்னர் புலியானது அங்கிருந்த மக்களை பார்த்து தப்பி ஓடியது. இருப்பினும் புலி கடித்ததில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்னறே இப்பகுதியில் புலி சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். இருப்பினும் இரண்டு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பிரோத பரிசோதனைக்காக பிரகாஷின் உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புலி தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.