“மத்திய அரசு நிதியை விடுவிக்க வலியுறுத்தப்படும்” - திஷா குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

3 months ago 10

சென்னை: “மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடிப் பயனாளிகளுக்கும் சென்று சேர்வதில் திராவிட மாடல் அரசின் பங்கை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மாநில அரசின் பங்குத் தொகையினை காலதாமதமில்லாமல் விடுவிக்கின்றோம். ஆனால், மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதனால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது. உடனடியாக, நிதியை விடுவிக்க வலியுறுத்தப்படும்,” என்று மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் (திஷா - DISHA) பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான நான்காவது ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.15) தலைமைச் செயலகத்தில், நடைபெற்றது.

Read Entire Article