சென்னை: தமிழகத்தில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் டெல்லியில் டிச.6, 7 தேதிகளில் ஆர்ப்பாட்டமும், கருத்தரங்கமும் நடத்தவுள்ளோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "தமிழகத்தில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு 2009ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதில் ஒப்புதல் பெற்று இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். முன்னதாக முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தது. இந்த குழுவின் அறிக்கை போதிய ஆதாரங்கள், தரவுகளைக் கொண்டதாக இல்லை.