திருச்சி, ஜன.31: திருச்சி மாநகர மது விலக்கு அமலாக்கப்பிரிவில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனம் 11, 3 சக்கர வாகனம்-1, நான்கு சக்கர வாகனம் 5 ஆக மொத்தம் 17 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த வாகனங்களின் பொது ஏலம் வரும் நாளை காலை 9.30 மணிக்கு பொன்மலையில் உள்ள திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நடக்கும் தேதியன்று காலை 9.30 மணி முதல் தங்களது ஆதார் அட்டையுடன் ரூ.2 ஆயிரம் முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். வாகனங்களை ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரியாக நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி தொகையையும், இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகவலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.
The post மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நடக்கிறது: குற்ற வழக்குகளில் பிடிபட்ட 17 வாகனங்கள் நாளை ஏலம் appeared first on Dinakaran.