மதுரையில் மூளைச்சாவு அடைந்த போலீஸ்காரர் உடலுறுப்பு தானம்: அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

3 months ago 12

 

மதுரை, பிப். 7: மதுரை, ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் மோகன்குமார்(31). இவர் கடந்த ஜன.30ம் தேதி அவரது வீட்டின் அருகில் இடையூறாக இருந்த மரத்தை வெட்டியுள்ளார். அப்போது உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர் டாக்டர்களின் அறிவுரையை ஏற்ற மோகன்குமாரின் மனைவி யோகலட்சுமி மற்றும் குடும்பத்தினர், அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர்.

இதையைடுத்து நேற்று அவரது ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துமவனைக்கும், மற்றொன்று திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல், தோல், எலும்பு, கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. பின்னர் அவரது உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

The post மதுரையில் மூளைச்சாவு அடைந்த போலீஸ்காரர் உடலுறுப்பு தானம்: அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு appeared first on Dinakaran.

Read Entire Article