மதுரையில் பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்களால் பெற்றோர்கள் பதற்றம் - போலீஸ் நிலை என்ன?

3 months ago 21

மதுரை; மதுரையில் நேற்று மீண்டும் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுவரை 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் பதற்றத்துடனே இருக்க வேண்டிய உள்ளது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மதுரையில் நான்கு பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலமாக மிரட்டல் வந்தது. தொடர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று மதுரை சின்னசொக்கிகுளம், காளவாசல், பெரியார்பேருந்து நிலையம் மற்றும் பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள 4 நட்சத்திர தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயிலில் மிரட்டல் வந்தது. கடந்த திங்கட்கிழமை மதுரை பேச்சிகுளம் பகுதியில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

Read Entire Article