மதுரையில் தந்தையிடம் தகராறில் ஈடுபட்ட மகனை தடுக்க சென்ற பெயிண்டர் பலி கழுத்தை வெட்டி முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது..

7 months ago 44
மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடியில் பெயிண்டரை கொலை செய்து சடலத்தை எரித்ததாக சிறார் சீர்த்திருத்த பள்ளியில் இருந்து ஜாமீனில் வெளி வந்தவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கு ஒன்றில் ஹரிகரன் என்பவர் சிறார் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் வெளிவந்த உடன், மதுபோதையில் தந்தையிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகமுத்து என்ற பெயிண்டர் இருவரையும் தடுக்க சென்ற போது ஹரிஹரன் அவரை தாக்கி கழுத்தை அறுத்து முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக போலீசார் தெரிவித்தனர்.  
Read Entire Article