
மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22-தேதி கிளாமர் காளி படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக இரு தனிப்படைகளை அமைத்து ஆண்டிப்பட்டி காவல் துறையினர் தேடி வந்தனர். இந்தநிலையில் கிளாமர் காளி (எ)காளீஸ்வரன் கொலை வழக்கில் தேடப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்கவுண்ட்ரில் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கில் ஏற்கெனவே ஜெயக்கொடி, கார்த்திக் உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்திருந்தது.