மதுரையில் அரசு கட்டிடம் ஆக்கிரமிப்பா? ஆய்வு செய்ய உத்தரவு

4 months ago 16

 

மதுரை, ஜன. 7: மதுரை தல்லாகுளம், கோகலே சாலையில் மதுரை கோட்ட பொதுப்பணித்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்குள்ள, அரசுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத்திற்கான ஓய்வறை இயங்கி வருகிறது. இதை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, பொதுப்பணி துறையின் மதுரை மண்டல தலைமை பொறியாளரிடம், ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்டல தலைமை பொறியாளர் செல்வராஜ் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட அலுவலகம் அரசுக்கு சொந்தமானதாக உள்ள நிலையில் அங்கு தனிநபரை பணியமர்த்துவதற்கும், சொந்த அலுவலகம் போல் பொருட்கள் பயன்படுத்தப்படுவதற்கும் ஏற்கனவே தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த கட்டிடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

 

The post மதுரையில் அரசு கட்டிடம் ஆக்கிரமிப்பா? ஆய்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article