‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்; ரூ.8.44 லட்சத்தில் பாமணி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சமையற்கூடம்

1 day ago 6

திருத்துறைப்பூண்டி மே 22 : திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பாமணி ஊராட்சியில் ரூ.8.44 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் பாமணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சமையற்கூடத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் முகாமிட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், வரம்பியம் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.181.60 லட்சம் மதிப்பீட்டில் நுணாக்காடு, விஸ்வகோதமங்கலம் மடப்புரம் தேவம்மாள்புரம் வரை கட்டப்பட்டுவரும் பாலத்தினையும்,

இராயநல்லூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், பனையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.38 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும், பூசாலங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.38 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும், பூசாலங்குடி ஊராட்சியில் 15வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.43.53 லட்சம் மதிப்பீட்டில் ஆலி வலம் பகுதியில் புதிய சுகாதார துணை மைய கட்டடம் கட்டப்பட்டுவருவதையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கீரக்களூர் ஊராட்சியிலுள்ள ஆசிரமத்தில் குளியலறை கட்டடம் கட்டப்பட்டுவருவதையும்,

வரம்பியம் ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளையும், பாமணி ஊராட்சியில் ரூ.8.44 லட்சம் மதிப்பீட்டில் பாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமையற்கூடம் கட்டப்பட்டுவருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்ஆய்வில், அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனர்.

The post ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்; ரூ.8.44 லட்சத்தில் பாமணி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சமையற்கூடம் appeared first on Dinakaran.

Read Entire Article