மதுரைக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

4 hours ago 5

மதுரை: கொடைக்கானலில் நடைபெறும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்யை காண வந்த ஏராளமான தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதையொட்டி விஜய்யை பார்க்க, காலை முதலே அவரது கட்சியினர், ரசிகர்கள் மதுரை விமான நிலைய பகுதியில் திரண்டனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். தடுப்பு வேலிகளை அமைத்து போலீஸார் அவர்களை தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Read Entire Article