மதுரை: மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியை அமைச்சர் பி.மூர்த்தியிடம் திமுக தலைமை ஒப்படைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தொடர் வெற்றியை தட்டிப் பறிக்கவே இந்த நடவடிக்கை என திமுவினர் தெரிவித்துள்ளனர். திமுகவில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நேற்று முன்தினம் மாற்றப்பட்டுள்ளனர்.
பலரின் அதிகார எல்லையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மதுரையில் மட்டும் 4 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது திமுகவினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.