
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் முன்பதிவு இன்று (29-ந் தேதி) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது.
கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று முதல் மே-2 ந் தேதி இரவு 9 மணி வரை இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை இன்று முதல் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை நகல், மொபைல் எண், இ-மெயில் முகவரி அவசியம். அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் மே 3-ந் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
சம்பந்தப்பட்டோர் மே 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண கட்டண சீட்டை பெறலாம். ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண சீட்டை மட்டுமே பெற முடியும்.
ரூ.200 கட்டண சீட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணசீட்டை பெற முடியாது. பிறந்த தேதியை சரியாக பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.