மதுரை பஸ் நிலையம் அருகே தோரண வாயில் கட்டுமானம் இடிந்து விழுந்து பொக்லைன் டிரைவர் பலி

1 week ago 3

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே, நேற்று இரவு தோரண வாயில் கட்டுமானத்தை இடித்து அகற்றியபோது, பொக்லைன் மீது கட்டுமானம் விழுந்து டிரைவர் உயிரிழந்தார். பணியை மேற்பார்வையிட்ட ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார். ஐகோர்ட் உத்தரவுபடி மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே நக்கீரர் தோரண வாயிலை பொக்லைன் மூலம் இடிக்கும் பணி நேற்றிரவு தொடங்கியது. பொக்லைன் டிரைவர் நாகலிங்கம் (25) இடிக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென தோரண வாயிலின் மேல்பகுதி (கட்டுமானம்) முழுவதுமாக பெயர்ந்து, பொக்லைன் மீது விழுந்தது.

இதில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் நாகலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.இடிக்கும் பணிகளை மேற்பார்வையிட்ட, பணியின் ஒப்பந்ததாரரான நல்லதம்பி (55) மீதும் இடிபாடுகள் விழுந்தன. இதில், அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இரவில் நடந்த கட்டிட விபத்தால் பஸ்நிலையம் அருகே திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கிய நாகலிங்கத்தின் உடலை நீண்ட நேரம் போராடி மீட்டனர். இது குறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post மதுரை பஸ் நிலையம் அருகே தோரண வாயில் கட்டுமானம் இடிந்து விழுந்து பொக்லைன் டிரைவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article