
மதுரை,
தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக வாராந்திர சிறப்பு ரெயில்களின் இயக்கத்தை நீட்டித்து தென்னக ரெயில்வே மற்றும் தென்மத்திய ரெயில்வே மண்டலங்கள் உத்தரவிட்டு உள்ளன. தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மதுரை வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.07191) வருகிற 9-ந் தேதி முதல் அடுத்த மாதம் 28-ந் தேதி வரை வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் கச்சிகுடாவுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.07192) வருகிற 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்.
அதேபோல, கச்சிகுடாவில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.07435) வருகிற 13-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 11-ந் தேதி வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை வழியாக கச்சிகுடா வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.07436) வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் 13-ந் தேதி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.