
மதுரை,
திருவனந்தபுரம் - மதுரை செல்லும் அமிர்தா ரெயிலில் (வண்டி எண்: 16343) வருகிற ஜூம் 5 முதல் முன்பதிவில்லா பயணிகள் வசதிக்காக ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி குறைக்கப்பட்டு ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
மறுமார்க்கத்தில் மதுரை - திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா ரெயிலில் (வண்டி எண்: 16344) வருகிற ஜூம் 6 முதல் முன்பதிவில்லா பயணிகள் வசதிக்காக ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி குறைக்கப்பட்டு ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு ஏ.சி., முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன்இயக்கப்படவுள்ளது.