மதுரை, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே

4 days ago 3

சென்னை,

தெற்கு ரெயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

அழகா் திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (எண்: 06049) மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண்: 06050) மதுரையில் இருந்து மே 12-ந் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை வழியாக மதுரை சென்றடையும். சித்திரை மாத பவுா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து மே 11-ந் தேதி காலை 11 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு மெமு விரைவு ரெயில் (எண்: 06137) அன்று பிற்பகல் 3.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண்: 06138) அதேநாளில் திருவண்ணாமலையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூா் வழியாக திருவண்ணாமலை சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article