மதுரை,
மதுரையில் இருந்து சென்னைக்கு வாரம் இருமுறை சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.22624) மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து (வ.எண்.22623) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து இரவு 8.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதற்கிடையே, இந்த ரெயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற மார்ச் மாதம் 21-ந் தேதி வரை இந்த ரெயிலில் தற்காலிகமாக 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 2 பொதுப்பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.
அதன்படி, இந்த ரெயிலில் நாளை முதல் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியும், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 4 பொதுப்பெட்டிகளும், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.