
தென்காசி,
மதுரையில் இருந்து சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளாவில் உள்ள குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16327 /16328) தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இதில் 9 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் 16-ந்தேதி முதல் குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டு, முன்பதிவு பெட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது.
அதன்படி லக்கேஜ் உடன் இணைந்த பொது மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள்-2, முன்பதிவில்லாத பெட்டிகள்-5, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுடன் கூடிய முன்பதிவு பெட்டிகள்-6, குளிர்சாதன பெட்டி-1 என மொத்தம் 14 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று சென்னை தென்னக ரெயில்வே போக்குவரத்து பிரிவு தெரிவித்து உள்ளது.